எதிரொலி

Saturday, January 17, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வாங்கிய புத்தகங்கள்

கண்காட்சியின் மூன்றாம் நாளான 10-01-09 சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். பிரம்மாண்டமாக இருக்கும் இந்தக் கண்காட்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தாலும் எல்லா அரங்குகளுக்கும் சென்று வர நேரமிருக்காது! கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான/குறிப்பிடும்படியான புத்தகங்களின் விபரங்களை இங்கு தந்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலான புத்தகங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே வெளிவந்தவை. (நேரமின்மை காரணமாக ஒரு சில முக்கியமான பதிப்பக அரங்குகளுக்குச் செல்ல இயலவில்லை. வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை முன்பே தயாரித்து எடுத்துச் சென்றதால் புத்தகக் கண்காட்சி்க்கென புதிதாக வெளியிடப் பெற்ற புத்தகங்களில் முழுக் கவனத்தைச் செலுத்தவில்லை).

 1. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச.தமிழ்ச்செல்வன் – தமிழினி பதிப்பகம் -(சிறுகதைத் தொகுப்பு) – ரூ.150
 2. ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே – ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் – பயணி வெளியீடு – ரூ.25
 3. வலி – அறிவுமதி – தமிழ்மண் பதிப்பகம் – (கவிதை) – ரூ.70
 4. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை – பாவ்லோ ஃப்ரையிரே, தமிழில்: இரா.நடராஜன் – பாரதி புத்தகாலயம் – ரூ.95
 5. சுண்டெலிக் கதைகள் – பேராசிரியர் ச. மாடசாமி – அருவி மாலை – ரூ.22 – (குழந்தைகளின் வீட்டுக்கல்விக்குத் துணைபுரியும் கதைகள்)
 6. முதலைக் கதைகள் – பேராசிரியர் ச. மாடசாமி – அருவி மாலை – ரூ.22 – (குழந்தைகளின் வீட்டுக்கல்விக்குத் துணைபுரியும் கதைகள்)
 7. கலாம் காலங்கள் – பி.எம். நாயர் – கண்ணதாசன் பதிப்பகம் – ரூ.75
 8. உடைந்த நிழல் – பாரதி பாலன் – சந்தியா பதிப்பகம் – (நாவல்) – ரூ.120
 9. நாடகம் நிகழ்வு அழகியல் – வெளி ரங்கராஜன் – அடையாளம் – ரூ.90
 10. மாற்றுக்களம் – ஜெ.பிஸ்மி – போதி – (ஆவணப் படங்கள் பற்றிய அறிமுகம்) – ரூ.60
 11. தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் – ஜெ.பிஸ்மி – போதி – ரூ.60
 12. குருதியில் படிந்த மானுடம்: சமகால அரசியல் திரைப்படங்கள் – விஸ்வாமித்திரன் – தோழமை வெளியீடு – ரூ.90
 13. எட்டாயிரம் தலைமுறை – தமிழ்மகன் – நியு செஞ்சுரி புக் ஹவுஸ் – (சிறுகதைகள்) – ரூ.65
 14. தமிழகத் தடங்கள் – மணா – உயிர்மை பதிப்பகம் – ரூ.90
 15. ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் – விடியல் பதிப்பகம் – ரூ.150
 16. குப்பை மேடுகளில்: சாலைவாழ்க் குழந்தைகளும் சுற்றுச் சூழலும் – கீதா உல்ஃப், அனுஷ்கா ரவிஷங்கர், ஒரிஜித் சென் – தாரா பதிப்பகம் – ரூ.80
 17. கூண்டுக்கிளி – முல்க்ராஜ் ஆனந்த், தமிழில்: ஆர்.மெர்சி லதா – நியு செஞ்சுரி புக் ஹவுஸ் – (சிறுகதைகள்) – ரூ.50
 18. ரஸ்டியின் வீரதீரங்கள் – ரஸ்கின் பான்ட் – நேஷனல் புக் டிரஸ்ட் – (Adventures of Rusty, Ruskin Bond புத்தகத்தின் மொழி பெயர்ப்பு) – ரூ.20
 19. காகித மடிப்புகளில் கணிதம் – நல்லாமூர் கோவி. பழனி – வனிதா பதிப்பகம் – ரூ.60
 20. ஒரு தோழரும் மூன்று நண்பர்களும் – இரா. நடராசன் – வம்சி புக்ஸ் – (சிறுவர்களுக்கான நாவல்) – ரூ.60
 21. தாய் மண்ணே வணக்கம் – கோ. நம்மாழ்வார் – நவீன வேளாண்மை – ரூ.35

ஆவணப்படம்:

 1. ஃபிடல் காஸ்ட்ரோ “புரட்சியின் பாதை” , ரெவல்யூசன் டிரீம் ஸ்டுடியோ – ரூ.99
Advertisements

Tuesday, March 11, 2008

சென்னை புத்தகக் (கண்)காட்சியில் வாங்கிய புத்தகங்கள்…

ஒரு வேலையைத் தள்ளிப்போடுவதற்குத் தான் எத்தனை காரணங்கள்! புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள்களிலேயே இந்தப் பதிவை எழுத ஆர்வமிருந்தும் தவிர்க்க இயலாத பல காரணங்களால் (வேலைப் பளு, சோர்வு, சோம்பேறித்தனம், நேரமின்மை என) எழுத இயலாமற் போனதற்காக சற்றே வருத்தம்.

கண்காட்சியில் நான் வாங்கிய முக்கியமான/குறிப்பிடும் படியான புத்தகங்களின் பெயர்கள்:

 • சிறுவர்க்கான இராமானுசம் எண்கள் – டாக்டர் மெ.மெய்யப்பன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
 • சிறுவர் சினிமா (சிறந்த உலகத் திரைப்படங்கள்) – விஸ்வாமித்திரன் – வம்சி புக்ஸ்
 • எரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல், தமிழில்: இரா. முருகவேள் – விடியல் பதிப்பகம்
 • நானோ டெக்னாலஜி – சுஜாதா – உயிர்மை பதிப்பகம்
 • அந்தமான் தீவுச் சிறை – என்.ராமகிருஷ்ணன் – வாசல்
 • பகத்சிங் (விடுதலை எழுச்சியின் விடிவெள்ளி) – எஸ்.ஏ.பெருமாள் – வாசல்
 • உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு – என்.ராமகிருஷ்ணன் – வாசல்
 • ஆண்ட்ரூ க்ரோவ் ‘Chip’க்குள் முத்து – எஸ்.எல்.வி.மூர்த்தி – கிழக்கு பதிப்பகம்
 • பில்கேட்ஸ் – என்.சொக்கன் – கிழக்கு பதிப்பகம்
 • விண்வெளி (வியப்பு, விநோதம், விசித்திரம்) – என்.ராமதுரை – கிழக்கு பதிப்பகம்
 • அலெக்சாண்டர் கிரஹாம் பெல் – இலந்தை சு.இராமசாமி – கிழக்கு பதிப்பகம்
 • குழந்தைகளைக் கொண்டாடுவோம் – இரா.காமராசு – அன்னம் பதிப்பகம்
 • குழந்தை மொழியும் ஆசிரியரும் – கிருஷ்ணகுமார் – நேஷனல் புக் டிரஸ்ட்
 • ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா – சூழலியல் பதிப்பகம்
 • கிணற்றுக்குள் முளைத்த மருதாணி – வே.இராசாமி – மதி நிலையம்
 • பூமரப்பெண் – ச.மாடசாமி – பாரதி புத்தகாலயம்
 • குழந்தைகளை கொண்டாடுவோம் – ஷ. அமனஷ்வீலி – பாரதி புத்தகாலயம்
 • 10 எளிய உயிரியல் சோதனைகள் – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம்
 • 10 எளிய வேதியியல் சோதனைகள் – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம்
 • 10 எளிய இயற்பியல் சோதனைகள் – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம்
 • டேஞ்சர்: ஸ்கூல்! (சமகால கல்வி குறித்த உரையாடல்) – தமிழில்: அப்பணசாமி – பாரதி புத்தகாலயம்
 • உலகில் திருக்குறள் ஆட்சி – திருக்குறள் சுப்பராயன் – காவேரிப் பதிப்பகம்
 • இயற்கை முளைத்த விதி – வ.கீதா – அடையாளம் பதிப்பகம்
 • கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும் – டா.புருனோ திலீபன் – அங்குசம் வெளியீடு
 • பேச்சுத்தமிழ் ஆங்கில கையகராதி – ப.நாராயணன் – வெண்மதி பதிப்பகம்

“யுரேகா வெளியீடு” குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான அருமையான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. வாங்கியனவற்றுள் சில:

 • கணிதக் கனிகள் (குழந்தைகளின் செயல்முறை கையேடு) – மு.தமோதரன் – மக்கள் பள்ளி இயக்கம் வெளியீடு
 • வாசிப்புத் திறனுக்கான பயிற்சிக் கையேடு – சந்திரா – யுரேகா வெளியீடு
 • லூயீ பிரெய்ல் – அனுமிதா – யுரேகா வெளியீடு
 • உலகம் உருவான கதை (யுரேகா அறிவியல் கருத்துத் தாள்) – யுரேகா வெளியீடு
 • படிப்பும் இனிக்கும் (குழந்தைகளின் செயல்முறை கையேடு) – ஆர்.கணேசன் – மக்கள் பள்ளி இயக்கம் வெளியீடு
 • தேன் துளிகள் (குழந்தைகளுக்கான வாசிப்புக் கையேடு) – சந்திரா – யுரேகா கல்வி இயக்கம்
 • யுரேகா அறிவியல் பரிசோதனைகள் – சந்திரன் – இந்திய வளர்ச்சி இயக்கம் (AID India)
 • Number Puzzles with Digital Roots – A.Ravishankar – Eureka Books
 • Geometry Games and Puzzles Part-1 – Arvind Srivaths – Eureka Books
 • The Mystery of the Earth’s Shape – Dr.V.Srinivasa Chakravarthy – Eureka Books

“எனக்குரிய இடம் எங்கே?” புத்தகத்தை எழுதிய பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள் குழந்தைகளுக்கான வீட்டுக் கல்வியைத் (Home Schooling) தொடங்குவதற்குத் துணைபுரியும் புத்தகங்களை எழுதத் தொடங்கியுள்ளார்கள். தற்போது “அருவி மாலை” வெளியீட்டில் 2 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

 • நாய் வால் (சங்கிலிக் கதைகள்) – ச.மாடசாமி – அருவி மாலை
 • முயல்குட்டியும் போலீசுகாரரும் (ஓசைக் கதைகள்) – ச.மாடசாமி – அருவி மாலை

திரு ப. நாராயணன் அவர்கள் தொகுத்த “பேச்சுத் தமிழ் – ஆங்கில கையகராதி (Tamil English Pocket Dictionary)” (வெண்மதி பதிப்பகம்) மிகச் சிறப்பாக உள்ளது. பேச்சு வழக்கில் தற்போது நாம் சரளமாகப் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்ட இந்த அகராதி குறைந்த விலையில் (ரூ15/-) பாரதி புத்தகாலயத்தில் கிடைத்தது.

எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்னும் நோக்கத்தில் நான் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை இங்கு தந்துள்ளேன். தமிழில் வெளிவரும் புத்தகங்களைப் பற்றி இணையத்தில் அறிந்து கொள்வதற்கு உதவியாக நீங்கள் வாங்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையாவது உங்கள் வலைப் பதிவில் வெளியிடுங்கள்!

Blog at WordPress.com.