கண்காட்சியின் மூன்றாம் நாளான 10-01-09 சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். பிரம்மாண்டமாக இருக்கும் இந்தக் கண்காட்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தாலும் எல்லா அரங்குகளுக்கும் சென்று வர நேரமிருக்காது! கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான/குறிப்பிடும்படியான புத்தகங்களின் விபரங்களை இங்கு தந்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலான புத்தகங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே வெளிவந்தவை. (நேரமின்மை காரணமாக ஒரு சில முக்கியமான பதிப்பக அரங்குகளுக்குச் செல்ல இயலவில்லை. வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை முன்பே தயாரித்து எடுத்துச் சென்றதால் புத்தகக் கண்காட்சி்க்கென புதிதாக வெளியிடப் பெற்ற புத்தகங்களில் முழுக் கவனத்தைச் செலுத்தவில்லை).
- மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச.தமிழ்ச்செல்வன் – தமிழினி பதிப்பகம் -(சிறுகதைத் தொகுப்பு) – ரூ.150
- ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே – ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் – பயணி வெளியீடு – ரூ.25
- வலி – அறிவுமதி – தமிழ்மண் பதிப்பகம் – (கவிதை) – ரூ.70
- ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்விமுறை – பாவ்லோ ஃப்ரையிரே, தமிழில்: இரா.நடராஜன் – பாரதி புத்தகாலயம் – ரூ.95
- சுண்டெலிக் கதைகள் – பேராசிரியர் ச. மாடசாமி – அருவி மாலை – ரூ.22 – (குழந்தைகளின் வீட்டுக்கல்விக்குத் துணைபுரியும் கதைகள்)
- முதலைக் கதைகள் – பேராசிரியர் ச. மாடசாமி – அருவி மாலை – ரூ.22 – (குழந்தைகளின் வீட்டுக்கல்விக்குத் துணைபுரியும் கதைகள்)
- கலாம் காலங்கள் – பி.எம். நாயர் – கண்ணதாசன் பதிப்பகம் – ரூ.75
- உடைந்த நிழல் – பாரதி பாலன் – சந்தியா பதிப்பகம் – (நாவல்) – ரூ.120
- நாடகம் நிகழ்வு அழகியல் – வெளி ரங்கராஜன் – அடையாளம் – ரூ.90
- மாற்றுக்களம் – ஜெ.பிஸ்மி – போதி – (ஆவணப் படங்கள் பற்றிய அறிமுகம்) – ரூ.60
- தமிழ் சினிமா சொல்ல மறந்த கதைகள் – ஜெ.பிஸ்மி – போதி – ரூ.60
- குருதியில் படிந்த மானுடம்: சமகால அரசியல் திரைப்படங்கள் – விஸ்வாமித்திரன் – தோழமை வெளியீடு – ரூ.90
- எட்டாயிரம் தலைமுறை – தமிழ்மகன் – நியு செஞ்சுரி புக் ஹவுஸ் – (சிறுகதைகள்) – ரூ.65
- தமிழகத் தடங்கள் – மணா – உயிர்மை பதிப்பகம் – ரூ.90
- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் – விடியல் பதிப்பகம் – ரூ.150
- குப்பை மேடுகளில்: சாலைவாழ்க் குழந்தைகளும் சுற்றுச் சூழலும் – கீதா உல்ஃப், அனுஷ்கா ரவிஷங்கர், ஒரிஜித் சென் – தாரா பதிப்பகம் – ரூ.80
- கூண்டுக்கிளி – முல்க்ராஜ் ஆனந்த், தமிழில்: ஆர்.மெர்சி லதா – நியு செஞ்சுரி புக் ஹவுஸ் – (சிறுகதைகள்) – ரூ.50
- ரஸ்டியின் வீரதீரங்கள் – ரஸ்கின் பான்ட் – நேஷனல் புக் டிரஸ்ட் – (Adventures of Rusty, Ruskin Bond புத்தகத்தின் மொழி பெயர்ப்பு) – ரூ.20
- காகித மடிப்புகளில் கணிதம் – நல்லாமூர் கோவி. பழனி – வனிதா பதிப்பகம் – ரூ.60
- ஒரு தோழரும் மூன்று நண்பர்களும் – இரா. நடராசன் – வம்சி புக்ஸ் – (சிறுவர்களுக்கான நாவல்) – ரூ.60
- தாய் மண்ணே வணக்கம் – கோ. நம்மாழ்வார் – நவீன வேளாண்மை – ரூ.35
ஆவணப்படம்:
- ஃபிடல் காஸ்ட்ரோ “புரட்சியின் பாதை” , ரெவல்யூசன் டிரீம் ஸ்டுடியோ – ரூ.99
உங்கள் பட்டியலுக்கு நன்றி உமா மகேஸ்வரன்!
இப்படி எல்லோரும் பட்டியல் போட்டால், தொகுத்து ஒரு விகி தயார் செய்யலாம்!
Comment by என். சொக்கன் — Saturday, January 17, 2009 @ 2:24 pm
தங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி சொக்கன்! புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்லும் வலைப் பதிவர்கள் தாங்கள் வாங்கும் குறிப்பிடத் தக்க புத்தகங்களின் பட்டியலை/பெயர்களை பதிவில் தந்தால் குறைந்த பட்சம் புத்தகங்களின் பெயர்களாவது தேடும் போது கிடைக்கும்!
Comment by umamaheswaran — Saturday, January 17, 2009 @ 4:40 pm
சொக்கன் (மற்றும் உமா)!
நீங்கள் சொன்ன அந்தப் பட்டியல் கூடிய விரைவில் தயார் செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன். அதுவரை… புத்தகக் (கண்)காட்சி தொடர்பான எனது தொகுப்புப் பதிவு மற்றும் விக்கி!
அன்புடன்
வெங்கட்ரமணன்
Comment by venkatramanan — Wednesday, January 21, 2009 @ 4:33 pm